Published : Mar 06, 2025, 02:19 PM ISTUpdated : Mar 06, 2025, 02:23 PM IST
மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் இரட்டை வேடத்தை அண்ணாமலை சாடியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சம கல்வி மக்கள் உரிமை என்ற பெயலில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என கோரி பாஜக சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.
25
Tamilisai Soundararajan Arrest
இந்நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் இன்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தமிழக கல்வி நிலையங்களில் இந்தி மொழிக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்தை பெற்று வந்தார். ஆனால் கையெழுத்து இயக்கத்திற்கு காவல் துறை அனுமதி பெறவில்லை என்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கூறி காவல்துறையினர் தமிழிசை தடுத்தனர். இதனால் தமிழிசை சௌந்தரராஜன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கையெழுத்து இயக்கத்துக்கு காவல்துறை முன் அனுமதி பெறாத காரணத்தினால் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
35
signature campaign
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழ்நாடு பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா தமிழிசை சௌந்தரரானை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
45
Annamalain
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
55
Annamalai condemns
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என அண்ணாமலை கூறியுள்ளார்.