Published : Mar 06, 2025, 11:30 AM ISTUpdated : Mar 06, 2025, 11:47 AM IST
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மூதாட்டி மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது. தப்பிக்க முயன்ற ஒரு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் மூதாட்டி சீதாலட்சுமி (75) மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் இருவரும் கடந்த 03ம் தேதி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24
Thoothukudi Double Murder
இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கடந்த மூன்று நாட்களாக போலீசார் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியில் கேமரா மற்றும் வாகன சோதனை மூலமாக தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையாபுரம் காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில், உதவியாளர் முத்துராஜ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் ஜாய்சன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க சென்றனர். அப்போது குற்றவாளியான முனீஸ்வரன் மற்றும் முத்து கண்ணன், வேல்முருகன் ஆகியோர் போலீசாரை கண்டதும் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர்.
44
Police Arrest
இதனால் போலீசார் முனீஸ்வரன் என்பவரை வலது காலில் சுட்டுபிடித்தனர். பின்னர் முத்து கணேஷ் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். குண்டு பாய்ந்ததில் வலியால் துடித்த முனீஸ்வரன் மற்றும் காயமடைந்த காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.