முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அமைச்சராக இருந்து வருகிறார். இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததை அடுத்து அமலாக்கத்துறையால் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
24
Senthil Balaji Case
இதனிடையே அவ்வப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
அதாவது கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்திக் மற்றும் அரசு ஒப்பந்தாரர் எம்.சி.சங்கர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று காலை முதல் கேரள மாநிலத்தை சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுட்டுள்ளனர்.
44
Enforcement Directorate Raid
2023 ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக அறியப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.