சென்னையில் மீண்டும் ED ரெய்டு.! முக்கிய புள்ளிகள் வீட்டிற்குள் அதிகாலையில் நுழைந்த அதிகாரிகள்

Published : May 06, 2025, 08:31 AM IST

தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்திய நிலையில், தற்போது சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

PREV
13
சென்னையில் மீண்டும் ED ரெய்டு.! முக்கிய புள்ளிகள் வீட்டிற்குள் அதிகாலையில் நுழைந்த அதிகாரிகள்
தமிழகத்தில் களம் இறங்கிய அமலாக்கத்துறை

சட்ட விரோ பணப்பரிவர்த்தனை காரணமாக நாடு முழுவதும் அமலாக்கதுறை அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அமைச்சர்களின் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொண்டது.

அமைச்சராக இருந்த பொன்முடி, செந்தில் பாலாஜி, துரைமுருகன், கே.என். நேரு ஆகியோரை சுற்றி வளைத்தது. இதில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. மூத்த அமைச்சராக இருந்த பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது.

23
அமைச்சர்களுக்கு செக் வைத்த அமலாக்கத்துறை

மேலும் கனிமவள மோசடி தொடர்பாகவும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகவும் அரசு அலுவகங்களில் தீவிர சோதனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டடது. இதில் கிடைத்த பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் தமிழகத்தில் சோதனையில் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று காலை 5க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை குறிவைத்து சோதனை நடைபெறுவதாக தகவல் கூறப்படுகிறது. 

33
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் படி, மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Read more Photos on
click me!

Recommended Stories