தொழில்மயமாக்கல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், வாகனத் தொழில், மின்னணு உற்பத்தி, மென்பொருள், மற்றும் பசுமை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மற்றும் திருப்பெரும்புதூர் போன்ற பகுதிகள் தொழில் மையங்களாக வளர்ந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது என கூறினார்.