பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இரு தரப்பும் பிரச்சினைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் Bயில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல் சின்னம் முடக்கி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் மல்லுக்கட்டும் தந்தை, மகன் தரப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை, மகன் இடையேயான பிரச்சினையால் தற்போது அக்கட்சியின் சின்னம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருவர் இடையேயான மோதல் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் தங்கள் பலத்தை நிரூபித்து சின்னத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் தங்கள் ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
25
அன்புமணியின் பதவக்காலம் முடிவடைந்துவிட்டது
இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. ராமதாஸ் தரப்பில், “அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. மேலும் அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். அப்படி இருக்கையில் அவரை எப்படி தலைவராக தேர்தல் ஆணையம் முடிவு செய்தது..? தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியது”.
35
மெஜாரிட்டி நாங்கள் தான்..
மேலும் அன்புமணி தரப்பில், “கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் அணியில் தான் உள்ளனர். மேலும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் கட்சியின் தலைமைக்கு உரிமை கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த தேர்தல் ஆணையம், “இரு தரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையிலேயே நாங்கள் முடிவெடுத்துள்ளோம். எங்களிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அன்புமணி தான் தலைவர். மாறாக ராமதாஸிடம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை தாக்கல் செய்தால் இது பற்றி முடிவெடுக்க தயாராக இருக்கிறோம்.
55
மா சின்னம் முடக்கப்படும்..
இரு தரப்பும் பிரச்சினைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் Bயில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல் சின்னமும் முடக்கி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் உரிமை கோரும் பட்சத்தில் இந்த விவகாரத்தை நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.