ADMK EPS : எடப்பாடியை புறக்கணித்தார்களா அதிமுக தொண்டர்கள்.! விக்கிரவாண்டி தேர்தலில் நடந்தது என்ன.?

First Published | Jul 11, 2024, 9:40 AM IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வாக்கு சதவிகிதம் 83 என்ற அளவை எட்டியது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அதிமுக தொண்டர்கள் மதிக்கவில்லையோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

jayalalaitha

அதிமுக அதிகார மோதல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 7ஆண்டுகள் கடந்த பிறகும் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது போல் இல்லை. இதனால் அதிமுக எதிர்கொண்ட 10 தேர்தல்களும் தோல்வியே கிடைத்தது. இதனால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் வெற்றியை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில் தான் தொடர் தோல்விகளால் அதிருப்தி அடைந்த தொண்டர்களுக்கு மீண்டும் ஒரு தோல்வி ஏற்பட்டால் தலைமை மீது அதிருப்தி ஏற்படும் என்ற நிலை உருவாகக்கூடாது என அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. 

sasikala

விக்கிரவாண்டி தேர்தல்- அதிமுக புறக்கணிப்பு

ஆனால் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. பாமகவும், நாம் தமிழர் கட்சியும் அதிமுகவின் ஓட்டுக்களை இழுக்க போட்டி போட்டது. ஆனால் யாருக்கும் ஆதரவு இல்லையென அதிமுக தலைமை கூறியிருந்தது.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாக்கு சதவிகிதிம் 83 சதவிகிதத்தை எட்டியது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்கு சதவிகிதம் ஆகும். எனவே அதிமுக மற்றும் தேமுதிகவினர் தேர்தலில் பாமக அல்லது நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருப்பது உறுதியானது. 

AIADMK EPS : மக்களவை தேர்தல் தோல்வி.. புலம்பிய நிர்வாகிகள்.. எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்ன?

Tap to resize

கிடு, கிடுவென உயர்ந்த வாக்குப்பதிவு

இது  ஒரு பக்கம் இருக்க அதிமுக தலைமை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் அதிமுகவினரும் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்தது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  எடப்பாடி பழனிசாமி பேச்சை அதிமுகவினர் மதிக்கவில்லை என்ற சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இதுவே ஜெயலலிதா உத்தரவிட்டு இது போன்று நடைபெற்றிருந்தால் அந்த பகுதி மாவட்ட செயலாளர் முதல் வட்ட செயலாளர் வரை மாற்றப்பட்டிருப்பார்கள் எனவே எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

vikravandi by election candidate

எடப்பாடியை மதிக்கவில்லையா.?

இந்த நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி கூறுகையில், அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? அல்லது எடப்பாடி பழனிசாமியையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர்   வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
 

 நோட்டாவிற்கு வாக்கு

எனவே காங்கிரஸ் இந்துத் தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தத் தொகுதியில் நோட்டா 2.18 லட்சம் வாக்குகள் பெற்றது. இதுதான் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது. இதேபோல  தான் அதிமுக, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

சென்னை கமிஷனரை மாத்திட்டா க்ரைம் குறைஞ்சிடுமா? CM குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை! TTV.தினகரன்!
 

எடப்பாடியை ஏற்றுக்கொள்ளவில்லை

தேர்தல் புறக்கணிப்பு என்றால் அதிமுகவினர் யாரும் வாக்குச்சாவடி பக்கமே செல்லக்கூடாது. வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய வேண்டும் அது தான் தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தமாகும். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 82.48%. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை  என்பது தெரிகிறது என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

Latest Videos

click me!