அதிமுக ஒருவரை மட்டும் நம்பியிருக்கும் கட்சி அல்ல.. செங்கோட்டையன் தொகுதியில் கொக்கரித்த இபிஎஸ்

Published : Dec 01, 2025, 08:17 AM IST

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருவரை மட்டும் நம்பியிருக்கும் கட்சி இல்லை என தெரிவித்துள்ளார்.

PREV
15
கோபியில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தமிழகத்தில் தூய்மையான மற்றும் புனிதமான ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், செங்கோட்டையனை 8 முறை வெற்றி பெற வைத்த கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

25
அதிமுக வழங்கியது தூய்மை ஆட்சி இல்லையா..?

தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இதே கட்சியைச் சேர்ந்த நபர் தற்போது மாற்று கட்சிக்கு சென்றுள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. போகும் போது சும்மா பேயிருந்தா பிரச்சினை இல்ல. ஆனால் மாற்றுக்கட்சியில் இணைந்தவுடன் தூய்மையான ஆட்சி கொடுப்போம் என்று செங்கோட்டையன் பேசுகிறார். MGR, ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சி காலங்களில் அவர் அதிமுகவில் இருந்தபோது தூய்மையான ஆட்சி கொடுக்கப்படவில்லையா..? துண்டை மாற்றியதால் அவரது கருத்தும் மாறிவிட்டது.

35
கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் வைத்திருக்ககக் கூடாது என்ற பொதுக்குழு தீர்மானத்தை மீறி, பசம்பொன்னில் கட்சியில் இருந்து நீக்கப்பபட்டவர்களை செங்கோட்டையன் சந்தித்தார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

45
தலைமைக்கு கெடு விதிப்பவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்..?

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, வேறொரு கட்சியின் முக்கிய பிரமுகர்களை செங்கோட்டையன் சந்தித்தார். அதை அதிமுக கண்டுகொள்ளவில்லை. ஆனால் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறி அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டுமென 10 நாட்கள் காலக்கெடு விதித்தார். தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்படிப்பட்டவரை கட்சியில் எப்படி வைத்திருக்க முடியும்..?

55
எடப்பாடியை விட கோபி அதிக வளர்ச்சி பெறும்..

கோபிசெட்டிப்பாளையம் தனி நபருக்கு சொந்தமான தொகுதி கிடையாது. அது அதிமுகவின் கோட்டை. 2026ல் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் கோபியில் வெற்றிவிழா கொண்டாடப்படும். மேலும் 2026ல் அதிமுக வெற்றி பெற்றதும் எடப்பாடி தொகுதியை விட கோபிடிசெட்டிப்பாளையத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories