16 மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டிய கன மழை.! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published : Dec 12, 2024, 06:22 AM ISTUpdated : Dec 12, 2024, 07:02 AM IST

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
16 மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டிய கன மழை.! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tamilnadu Rain

நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வட கிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

தற்போது இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன் படி நேற்று முதல் பல இடங்களில் மழை கொட்டியது. 

24
Heavy Rain

மிக கன மழை எச்சரிக்கை

இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,   சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடிசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

34
RAIN CHENNAI

சாலையில் தேங்கிய தண்ணீர்

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மழையானது விட்டு விட்டு பெய்தது. இரவு நேரத்தில் பிடித்த மழையானது விடாமல் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலைகள் பாதிக்கப்பட்டது. 
 

44
school holiday

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை,

புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,நெல்லை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. இதே போல புதுச்சேரி, காலைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories