திமுக, பாஜக கட்சிகளையே முக்கிய எதிரிகளாகக் குறிப்பிட்ட விஜய், இந்த முறை பிரதமர் மோடியின் பெயரையும், “அங்கிள் ஸ்டாலின்” என முதல்வரையும் நேரடியாக விமர்சித்தார். இதுவரை பேசாத அதிமுக மீது தாக்குதல் நடத்தி, சீமானுக்கும் மறைமுக சவால் விடுத்தார். அதேசமயம் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோருக்கு மரியாதை செலுத்தி, அதிமுக, தேமுதிக தொண்டர்களையும் கவனிக்க வைத்தார். கூட்டணியில் தானே தலைமை, ஆனால் எங்கள் கட்சியுடன் கூட்டணியில் சேர்வோருக்கு அதிகாரப் பங்கும் கிடைக்கும் எனவும் வலியுறுத்தினார்.