இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, "தமிழ்நாடு முழுதும், 31,000 கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும், ஆனால், போதிய விண்ணப்பங்கள் வராததால், 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. மற்ற இந்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து கோயில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களையே நியமிக்க முடியவில்லை என்பதிலிருந்தே, இந்து கோயில்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.