உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு வேண்டி திமுகவிடம் தொடர்ந்து வம்பிழுத்து வர, செல்வபெருந்தகை திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தொடர்ந்து சொல்லி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கட்டத்தில் திமுகவும், காங்கிரம் சமூக வலைத்தளத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டன.
இந்த விவகாரத்தில் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக கருத்து கூறாமல் இருந்து வந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எல்லாத்துக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்தார்.
ஸ்டாலின் சொன்னது என்ன?
இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கத்தில் இல்லை. இது சரியான நடைமுறையாக இருக்காது. இதை நாங்களும் புரிந்துள்ளோம். அவர்களும் (காங்கிரஸ்) புரிந்துள்ளார்கள்.
ஆனால் ஒரு சிலர் தான் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். திமுக தலைவரே ஆட்சியில் பங்கு இல்லை என அறிவித்து விட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.