ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்

Published : Feb 11, 2026, 05:38 PM IST

TN Rain: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்வலுவான மாடன்-ஜூலியன் அலைவு (MJO) இந்திய பெருங்கடலுக்குள் நுழைவதால், பிப்ரவரி கடைசி வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை மழை பெய்யும்.

PREV
14

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில் பிப்ரவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

24

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் முழுமையாகக் கடந்துவிட்ட நிலையில் (MJO)அதிகம் தென்படாமல் இருந்த மாடன்-ஜூலியன் அலைவு தற்போது வலுவான தீவிரத்துடன் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது. கிங் மேக்கர் MJO இந்தியப் பெருங்கடலுக்கு வரும்போது அது வானிலை போக்கை முற்றிலுமாக புரட்டி போடும் ஆற்றல் கொண்டது.

34

இதன் தாக்கத்தால் பிப்ரவரி கடைசி வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் மழை பெய்யும். பொதுவாக பிப்ரவரி மாதம் வறண்ட வானிலை நிலவும். வலுவான MJO நிகழ்வுகள் எதிர்பாராத வெப்பச்சலனங்களைத் தூண்டக்கூடும். இந்த காலகட்டத்தில் பரவலான இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு அரிதான நிகழ்வாகும்.

44

பிப்ரவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலையைக் கொண்டிருக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் பரவலான இடியுடன் கூடிய மழை அல்லது பிற மழைப்பொழிவு ஒரு அரிதான நிகழ்வாகும். ஆனால், வலுவான MJO நிகழ்வுகள் எதிர்பாராத வெப்பச்சலனங்களைத் தூண்டக்கூடும். இருப்பினும், இது பருவத்தையொட்டி பெய்யும் மழை அல்ல என்பதால், இந்த கணிப்பை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த நிகழ்வு பிப்ரவரி 18 அல்லது 19ம் தேதி வாக்கில் உறுதிப்படுத்தலாம். MJO வந்தால் எதையாவது கொடுக்காமல் போகாது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories