காரைக்காலில் இருந்து சுமார் 90 கி.மீ கிழக்கு-வடகிழக்கிலும், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 120 கி.மீ வடகிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து சுமார் 130 கி.மீ தென்கிழக்கிலும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 170 கி.மீ வடக்கு-வடகிழக்கிலும், சென்னையில் இருந்து சுமார் 180 கி.மீ தெற்கு-தென்கிழக்கிலும் டிட்வா புயல் மையம் கொண்டிருந்தது.
தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் மற்றும் மாலையில் வடக்கு நோக்கி நகரும்போது, இந்த புயலானது தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியிலிருந்து முறையே குறைந்தபட்சம் 70 கி.மீ மற்றும் 30 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும். பின்பு இன்று இரவுக்குள் டிட்வா படிப்படியாக வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் இருக்கும்
டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால் சென்னையில் எதிர்பார்த அளவில் மழை பெய்யவில்லை. அதே வேளையில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.