Tiruchendur Murugan Temple
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லையில் வரலாறு காணாத அளவில் தொடர் கனமழை கொட்டி வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண், பாளையம்கோட்டை, புதிய பேருந்து நிலைய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது
Tamilnadu Rains
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், சேரன்மாகாதேவி, முக்கூடல், கடையம், பொட்டல்புதூர் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. தென்காசி நகர பகுதிகளிலும்,செங்கோட்டை நகர பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டி வருகிறது. தூத்துக்குடி நகர பகுதிகள் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கோவில்பட்டியில் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதே போன்று திருச்செந்தூரிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.
'டிசம்பர் 16'; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!
Tirunelveli Rains
தாமிரபரணியில் 56 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருப்பதால் செல்லும் வழியில் கரையோர பகுதிகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையின் பல இடங்களில் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, ஏரல்-திருச்செந்தூர் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Thamirabarani Flood
இதனால் இன்றும், நாளையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்லார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் மற்றும் ஏரல்-திருச்செந்தூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மழை, வெள்ளத்தினை கருத்தில் கொண்டு 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளுத்துக்கட்டும் மழை; இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!