திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! சோகத்தில் பக்தர்கள்! நடந்தது என்ன?

Published : Oct 09, 2025, 08:34 AM IST

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பக்தர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. 

PREV
14
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

24
பக்தர்கள் தரிசனம்

இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 5 மணிநேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும்.

34
கடலில் மூழ்கிய பக்தர்

இந்நிலையில் கோவை மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (38). என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய போது கடல் அலையில் சிக்கி மூழ்கினார். கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் மற்றும் மரைன் போலீசார் அவரை ஒருவழியாக மீட்டு கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

44
போலீஸ் விசாரணை

இதனையடுத்து அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் குளித்த பக்தர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories