ஆசிரியர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி அறிவித்த தமிழக அரசு

Published : Jun 06, 2025, 07:45 AM ISTUpdated : Jun 06, 2025, 02:52 PM IST

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்கள் பல நாட்களுக்கு பிறகு பாடங்களை படிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஆசியர்களின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில் பல பள்ளிகளில் உரிய வகையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லையென புகராக கூறப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரமும் குறைந்து வருகிறது. எனவே ஆசிரியர்கள் காலிப்பணியிடங்ளை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

24
சொந்த ஊருக்கு பணிமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள்

இதே போல ஆசிரியர்கள் வேலைக்காக சொந்த ஊரை விட்டு பல மாவட்டங்களை கடந்து வெளியில் தங்கியிருந்து பள்ளிகளுக்கு சென்று வரும் நிலையும் உள்ளது. எனவே சொந்த மாவட்டத்தில் அல்லது அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் இணைய வழி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசியரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

34
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளி /ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள். கணினி பயிற்றுநர். உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு

44
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி என்ன.?

மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு 12.06.2025 13.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories