செங்கல்பட்டு மாவட்டத்தில் 08,06,2025 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8ஆம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வியை முடித்தும், படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்காமலும் பல இடங்களில் வேலை தேடி வருகிறார்கள். கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல லட்சம் பேருக்கு வேலையானது கிடைத்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
24
வேலைவாய்ப்பு முகாம்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 08,06,2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தைலாவரம் திட்ட பகுதி, தைலாவரம்-கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம். (தைலாவரம் பேருந்து நிறுத்தம்) வளாகத்தில் நடைபெறும்.
34
சிறப்பு அம்சங்கள்
முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளது. 5000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம்.