இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான மழைபொழிவு ஏற்படக் கூடும் தெரிவித்துள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், குமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.