தமன்னா, காஜல் அகர்வாலை காட்டி பணம் வசூல்.! சொகுசு கப்பலில் உல்லாசம்- போலீசார் கையில் சிக்கிய மோசடி தலைவன்

Published : Feb 27, 2025, 09:01 AM ISTUpdated : Feb 27, 2025, 09:07 AM IST

புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கோடி ரூபாய் இழந்துள்ளார். நடிகை தமன்னா முன்னிலையில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
17
தமன்னா, காஜல் அகர்வாலை காட்டி பணம் வசூல்.! சொகுசு கப்பலில் உல்லாசம்- போலீசார் கையில் சிக்கிய மோசடி தலைவன்
தமன்னா, காஜல் அகர்வாலை காட்டி பணம் வசூல்.! போலீசார் கையில் சிக்கிய மோசடி தலைவன்

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக அமைந்தால் மறு பக்கம் மோசடி நடவடிக்கைகளுக்கு வழி அமைத்துக்கொடுக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் பல வகைகளில் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பல வகையிலான சூதாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஒருவகையான மோசடி தான் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கோடி கோடியாக பணம் கொட்டும் என்ற ஆசை வார்த்தை. இதனை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் வந்து நிற்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.  

27
கிரிப்டோ கரன்சியில் முதலீடு

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை  சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அசோகன்(66)  ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். தனக்கு கிடைத்த ஓய்வு ஊதியம் மற்றும் தான் சேமித்து வைத்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு தொடர்பாக  இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதனை உண்மை என நம்பி முதலீடு செய்துள்ளார்.

அடுத்ததாக அசோகனை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனையடுத்து கிரிப்டோ கரன்சியில் முதல் தவணையாக 10 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

37
தமன்னா, காஜர் அகர்வாலை அழைத்து ஏமாற்றிய கும்பல்

 கடந்த 2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.  அப்பொழுது அங்கு பிரபல முன்னணி நடிகை தமன்னா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டதை பார்த்த அசோகன்  சிறுக சிறுக சுமார் ஒரு கோடி முதலீடு செய்துள்ளார். மேலும் அசோகன் அவரது நண்பர்களையும்,  புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

47
ஆசை வார்த்தை கூறி மோசடி

அடுத்த சில மாதங்களில்  சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அசோகன் அழைக்கப்பட்டார். அப்போது அங்கு நடிகை காஜல் அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்வில்   100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களை  பரிசாக வழங்கியுள்ளனர்.  தனக்கு வழங்கப்பட்ட காருக்கு பதிலாக ரூபாய் 8 லட்சம் பணமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

57
விழா நடத்தி பணம் வசூல்

 மேலும் மும்பையில் சொகுசு கப்பலில் மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை  திரட்டவும் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இதில் ஒருகட்டத்தில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் பணம் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது.

இந்த நிலையில் மேற்படி அஸ்பே என்கிற இணைய பக்கத்தில் முதலீடு செய்த தொகையை காட்டிலும் 9 கோடிக்கு மேல் இருப்பதாக காண்பித்தது ஆனால் அதனை வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது மாற்ற முடியவில்லை. 

67
சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இந்நிலையில் திடீரென அஸ் பே இணைய பக்கமே காணாமல் போயுள்ளது. இதனையடுத்து அசோகன்   தன்னுடன் பேசி வந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது எதிர்முனையில் நபர் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த அசோகன் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து கோயம்புத்தூர் விரைந்து சென்று நித்தீஷ் ஜெயின்(36) மற்றும் அரவிந்த் குமார்(40) என்ற இரண்டு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்

77
60 கோடி மோசடி- பென்ஸ் கார் பறிமுதல்

அவர்களிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் சொகுசு கார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து இருவரையும் புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில்   டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை, கோயமுத்தூர், பெங்களூர்,  ஆந்திரா, கேரளா, விழுப்புரம், திருப்பூர் புதுச்சேரியிலும் 60 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும் இந்த மோசடியில் தொடர்புள்ளவர்களை மற்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Read more Photos on
click me!

Recommended Stories