Thiruparankundram : முதன்முறையாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதன் எதிரொலி... திருப்பரங்குன்றத்தில் சிஆர்பிஎப் குவிப்பு

Published : Nov 28, 2026, 06:58 AM IST

Thiruparankundram Deepathoon : உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

PREV
13
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) குவிக்கப்பட்டுள்ளது. "ஒரு கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். உயரதிகாரிகளின் அடுத்தகட்ட உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என சிஆர்பிஎப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, நவம்பர் 28-ம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிகழ்வில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க அனுமதி அளித்த நீதிமன்றம், எந்த பிரச்சனையும் இன்றி தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தியது.

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

23
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இருந்தபோதிலும், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் பெரும் சர்ச்சை எழுந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, தீபத்தூணுக்கு பதிலாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே தீபத்தூண் அருகேயும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நவம்பர் 24-ம் தேதி தீபம் ஏற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனாலும் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இது தங்களின் முந்தைய உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் என இன்று அதிருப்தி தெரிவித்துள்ளது.

'தீபத்தூண் இல்லை, சர்வே கல்தான்'... ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு!

33
கார்த்திகை தீபம்

முன்னதாக, நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நவம்பர் 24-ம் தேதி ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இது எந்தவித சட்ட முன்மாதிரியையோ அல்லது உரிமை தொடர்பான பரவலான கோரல்களையோ தீர்த்து வைக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thiruparankundram: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாதது ஏன்..? கோவில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்

Read more Photos on
click me!

Recommended Stories