பெண் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர். திரிசூலி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், காவல்துறை மேற்கொள்ள வேண்டிய விசாரணை தொடர்பாகப் பல்வேறு வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஐ.ஜி. காமினியின் மேற்பார்வையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.