தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தென் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது. நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று மதுரை விமான நிலைய பகுதிகளில் 106.16 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் மதுரை நகரம் 104.36 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், தூத்துக்குடி 102.56 டிகிரி, சென்னை நங்கம்பாக்கம் 102.38, நாகை 101.84, ஈரோடு 101.48, வேலூர் 101.66, திருத்தணி 101.3, கடலூர், திருச்சி 100.58, பரமத்தி வேலூர், தஞ்சாவூர் 104 டிகிரி ஃபாரன்ஹூட் பதிவானது.