Published : Nov 03, 2025, 10:37 AM ISTUpdated : Nov 03, 2025, 10:59 AM IST
கோவையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மாணவியின் நண்பரும் அரிவாளால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் பின்புறத்தில் இருக்கக்கூடிய இந்த பகுதி என்பது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. அதுமட்டுமில்லை இது ஒரு காட்டுப் பகுதியாகவே கருதப்படுகிறது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மது அருந்துவர்களும், அதேபோன்று பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருபவர்களும் இந்த பகுதிகளில் அடிக்கடி சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். சந்தேகத்திற்கு ஈடாக யார் இருந்தாலும் அவர்களை எச்சரித்து விரட்டி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
24
கல்லூரி மாணவி
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு தங்கி படித்து வருகிறார். கோவையில் நேற்று இரவு 11 மணியளவில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் வினீத் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்களை பார்த்துள்ளனர். பின்னர் வினீத்தை அரிவாளால் தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர்.
34
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
பின்னர் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று ஆடைகளை மூன்று பேரும் கிழித்து எறிந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வினித் மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண் விழித்த வினீத் பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆண் நண்பர் வினித் 10 தையல்கள் போடப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கோவை விமான நிலையம் பகுதியில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.