அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?

Published : Nov 04, 2025, 08:32 AM IST

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் காவலரைத் தாக்கியதால் மூவரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

PREV
15
கோவை கல்லூரி மாணவி

கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்று கிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த ஆண்பரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு அந்த கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஆண் நண்பரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் காவல் ஒன்று இருக்கிறதா என்று அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்று அதிமுக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

25
பட்டத்தரசி அம்மன் கோவில் பதுங்கி இருந்த குற்றவாளி

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

35
சுட்டு பிடித்த போலீஸ்

தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும் போது மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும், குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து.

45
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

குற்றவாளிகள் மூன்று பேர் காலிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அவர்கள் கீழே விழுந்து வலியால் துடித்தனர். பின்னர் மூன்று பேரும் குண்டு காயத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

55
விசாரணையில் அதிர்ச்சி தகவல்

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரும் நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories