சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏவாக இருந்தவர் வி.எஸ். பாபு. திடீரென ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சுமார் 70 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்திலும் தவெக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
VS Babu Net Worth : 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் வி.எஸ்.பாபுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?