தமிழ்நாட்டிற்கு பெரும் முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் முதலீட்டாளர்களை சந்தித்து பேர்ச்சுவார்த்தையும் நடத்தினார்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் நோக்கியா, கூகுள் உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமார் 4600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.
அதைத்தொடர்ந்து, Google, Apple மற்றும் Microsoft போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் பதவி அலுவலர்களுடன் பேச்சுவைர்தை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மற்றும் தேவையான தொழிற்சாலைகளை அமைக்க அழைப்புகள் விடுக்கப்பட்டது. Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.