Published : Feb 24, 2025, 09:14 AM ISTUpdated : Feb 24, 2025, 09:19 AM IST
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் 14 மாவட்டங்களில் சமூகப் பணியாளர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மார்ச் 7, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
14 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு.! மதிப்பூதியத்தில் பணி நியமனம்.!
தமிழக அரசு சார்பாக வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்தி தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் அரசு பணியில் இணைய விரும்பும் இளைஞர்களுக்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. எனவே இந்த தேர்விற்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் இலவசமாக பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24
மதிப்பூதிய அடிப்படையில் பணி நியமனம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அரியலூர் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் 2015 ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு பெண் உள்ளடக்கிய இரு சமூகப் பணியாளர் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
34
வேலைவாய்ப்பு - தகுதிகள் என்ன.?
வயது வரம்பு
35-65 வரை உள்ளவர்கள்.
தகுதிகள்
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
அல்லது
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி (அ) குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
44
விண்ணப்பிக்க கடைசி நாள்
வயது வரம்பு
35-65 வரை உள்ளவர்கள்.
விண்ணப்பங்களை www.dsdcpimms.tn.gov.in இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 07-03-2025க்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்-300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.