ஒரு மாதம் தான் கெடு.! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு

First Published | Nov 29, 2024, 8:48 AM IST

Tamilnadu Government Employees : அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். எனவே அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 

tamilnadu

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை உரிய முறையில் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக அரசு ஊழியர்கள் உள்ளனர்.

அரசு சார்பாக எந்த திட்டங்கள் அறிவித்தாலும் அது அடித்தட்டு மக்களை சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து திட்டங்களை சேர்க்க வேண்டும்.

GOVERNMENT JOB

அரசு ஊழியர்களின் செயல்பாடு

மேலும் திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அதனை சரி செய்ய வேண்டிய கடமை அரசு ஊழியர்களுக்கு உண்டு. அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை சரிவர செய்யவில்லையென்றால் அரசுக்கு தான் கெட்ட பெயர் உருவாகும்.

இந்தநிலையில் அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலளார் முருகானந்தம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம், வருவாய்துறை உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சார்பாக ஆயிரக்கணக்கான புகார் மனு அளிக்கின்றனர்.

Latest Videos


home

பொதுமக்களின் புகார் மனுக்கள்

இதில் பலரின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே புகார் தொடர்பாக  பொதுமக்களிடமிருந்து மனு கிடைத்த நாளில் இருந்து  அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ,  பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த புகார் மனுக்கு மூன்று நாட்களில் ஒப்புகை சீட்டு வழங்குவதும், புகார் மனுமீதான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  

RATION CARD

ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை

மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்பட்சத்தில் அது குறித்து புகார் கொடுத்த மக்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

tamilnadu government

மாதந்தோறும் அறிக்கை

மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம்  என  தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை கவனமாக பின்பற்றி மாதம் தோறும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

click me!