வெங்காயத்தோடு போட்டி போடும் தக்காளி.! ஒரே நாளில் கிடு கிடுவென உயர்வு- ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

First Published | Nov 29, 2024, 7:49 AM IST

தொடர் மழை மற்றும் ஏற்றுமதி காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வெங்காயமும் தக்காளியும் போட்டி போட்டு விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

vegetable

காய்கறிகளின் விலை என்ன.?

காய்கறி தான் சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கும், அந்த வகையில் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  விற்பனைக்காக காற்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனிடையே தங்காளி மற்றும் வெங்காயம் ரசம் முதல் பிரியாணி சமைப்பதற்கு முக்கிய தேவையாக உள்ளது.

அதன் படி  மக்கள் மற்ற காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயத்தை தான் அதிகளவு வாங்குவார்கள். ஆனால் வெங்காயத்தின் விலையானது பல மடங்கு அதிகரித்து பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்தது. வெங்காயத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கத்தின் காரணமாகவே பல டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது

ONION

உயர்ந்த வெங்காயம் விலை

மேலும் தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் லாரி, லாரியாக வந்த வெங்காயத்தின் வரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது வெங்காயம் உற்பத்தி சரியாக இல்லாத காரணத்தால் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Tap to resize

onion

உயரும் தக்காளி விலை

இதனிடேயே சமையலுக்கு அத்தியாவசிய தேவை தக்காளி, இதன் விலை கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தக்காளி விலையானது கடந்த சில நாட்களில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 

tomato

உயர்ந்த தக்காளி விலை

அதன் படி மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வி்றபனையாகிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

vegetable

திடீரென உயர்ந்த காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

vegetable price

கோயம்பேட்டில் காய்கறி விலை

கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!