Published : Dec 05, 2024, 02:18 PM ISTUpdated : Dec 05, 2024, 02:28 PM IST
Chief Minister Stalin : வடகிழக்குப் பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் தமிழகம், குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர் போன்ற இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக பெஞ்சல் புயல் பாதிப்பால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக வட மாவட்டங்களில் சுமார் 50 செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வீடுகள் அடித்து செல்லப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
24
Sivakarthikeyan financial support
நிவராண நிதி அறிவித்த தமிழக அரசு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வீடுகள், கால்நடைகள்,பயிர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெள்ள நிவாரணந்திற்கு 2000 கோடி நிதி ஒதுக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தற்போது வரை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நடிகர் சிவ கார்த்திகேயன் முதல் ஆளாக நிதியை வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்த சிவ கார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
34
heavy rain in tamilnadu
ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஸ்டாலின்
இந்தநிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கக் கடலில் உருவான "ஃபெஞ்சல் புயல்" காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
44
Chief MinisterStalin financial assistance
மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்
மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் வழங்கினார்.