கலைஞருக்காக பிறந்தநாள் தேதியையே மாற்றியது ஏன்? ஸ்டாலினிடம் இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்!

Published : Mar 02, 2025, 01:19 PM ISTUpdated : Mar 02, 2025, 01:46 PM IST

இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யவுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி இளையராஜாவுக்கு இசைஞானி பட்டம் சூட்டியதை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

PREV
14
கலைஞருக்காக பிறந்தநாள் தேதியையே மாற்றியது ஏன்? ஸ்டாலினிடம் இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்!

இசைஞானி இளையராஜாவின் பாடலை கேட்காதவர்கள் யாரும் இருந்ததில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இளையாராஜா பாடல் ஒலிக்காத டிவியோ, ரேடியோவோ இருக்க முடியாது. அனைவரது இதயங்களில் கொள்ளை கொள்ளுவது இளையராஜாவின் பாடல்கள்.

இந்த நிலையில் இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யவுள்ளார். ஆசியாவிலையே யாரும் செய்யாத சாதனையாக இந்த சாதனை உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.  

24
இளையராஜாவை சந்தித்த ஸ்டாலின்

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது,  ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார்.  நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். 

இசைஞானியுடன் இன்றைய காலைப் பொழுது! இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்

34
லண்டன் மாநகரில் சிம்பொனி

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.  உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இளையராஜாவும் முதலமைச்சர் ஸ்டாலினும் பழைய நினைவுகளை பகிரந்து கொண்டுள்ளனர். 

44
நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்- இளையராஜா

அதில்,  தமிழ்நாடு அரசு,சார்பாகவும். தலைவர் கலைஞர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.தொடர்ந்து பேசிய இளையராஜா,  கலைஞர் தான் எனக்கு இசைஞானி என பெயர் சூட்டினார். அதனை மாற்றவே முடியவில்லை. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவோ பட்டம் வந்தாலும் இது தான் நிற்கிறது. இசைஞானியா எல்லாருடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் குடியிருக்கிறீர்கள்.

உங்களுடைய பிறந்தநாளான  ஜூன் 3 ஆம் தேதியை ஜூன் 2 ஆம் தேதி என மாற்றிவிட்டீர்களே என ஸ்டாலின் கேட்க, அதற்கு இளையராஜா. அப்பாவிற்காகத்தான் (கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஜூன் 3) என இளையராஜா தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் உங்கள் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல் தான் எப்போதும் கேட்பேன். காரில் போகும் போதெல்லாம் தங்கள் பாடல் தான் என மகிழ்ச்சியோடு கூறுகிறார். 

Read more Photos on
click me!

Recommended Stories