Government school: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்! வெளியான முடிவுகள்!

First Published | Nov 6, 2024, 2:06 PM IST

தமிழக அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்ற 1000 மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌  தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 1,03,756 மாணவ மாணவியர்கள்‌ இந்த தேர்வை எழுதினர்‌. 

இதையும் படிங்க: TN Government Schools: அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு! என்னென்னு தெரியுமா?

Tap to resize

இத்தேர்வில்‌ 1000 மாணாக்கர்கள்‌ (500 மாணவர்கள்‌ + 500 மாணவியர்கள்‌) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம்‌ ரூ.1000 வீதம்‌ 10 மாதங்களுக்கு  உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்‌. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ இன்று வெளியிடப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க:  School Holiday: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை! இனி அடுத்த வாரம் தான் ஸ்கூல்! என்ன காரணம் தெரியுமா?

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

அதன்படி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், ஊக்கத் தொகைக்கான தேர்வுப்பட்டியலை காண TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!