TN Government Schools: அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு! என்னென்னு தெரியுமா?

First Published | Nov 6, 2024, 12:50 PM IST

Government Schools: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. எமிஸ் மற்றும் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர் எண்ணிக்கை 100% சரியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: School Holiday: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை! இனி அடுத்த வாரம் தான் ஸ்கூல்! என்ன காரணம் தெரியுமா?

Tap to resize

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக்  கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை மண்டல அளவில் உறுதி செய்ய வேண்டும். 

ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின் உடனே அதை சரி செய்ய வேண்டும். அதேபோல், மாணவர்கள் யாரேனும் நீண்டகால விடுப்பில் இருந்து வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சார்ந்த தலைமை ஆசிரியர் அவரை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு (Common Pool) அனுப்பிட வேண்டும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதையும் படிங்க:  பெண்களை சீரழித்த சீமான்! நீங்கள் தான் கூமுட்டை! விஜய் அண்ணனுக்காக ரீ என்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி!

எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இவற்றை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் எமிஸ் இணையதளத்தில் 100 சதவீதம் சரியாக உள்ளது எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!