இந்த ஆண்டிற்கான சபரிமலை சிறப்பு பேருந்துகள் அய்யப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தியலிருந்து மதியம் 14.00 & 14.30 மணியளவிலும் மற்றும் டாக்டர் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து மதியம் 14.30 & 15.00 மணியளவிலும் திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் குமுளி வழியாக சபரிமலைக்கு தற்போது இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்த சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படும். மேலும், 90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, http://tnstc.in என்ற இணையதளத்திலும் மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.