Tamilnadu Weatherman: சென்னையில் 17ம் தேதி முதல்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன பகீர் எச்சரிக்கை

Published : May 14, 2026, 02:59 PM ISTUpdated : May 14, 2026, 03:05 PM IST

Heatwave: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

PREV
15
அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

25
கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

35
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இந்நிலையில் சென்னையில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என பிரதீப்ஜான் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மே 17, 18 முதல் மே 27 வரை சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மீண்டும் கடும் வெப்பம் அதிகரிக்கும். ஆந்திராவை ஒட்டியுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு இதுவே மிகவும் வெப்பமான காலகட்டமாக இருக்கும்.

45
சென்னையில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில்

கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட பகுதியில் வெப்பநிலை 35-36°C ஆகப் பதிவாகி வருகிறது. வரும் வாரத்தில் இது சுமார் 41-42°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வதைக்கும்.

55
10 நாட்களுக்கு மழைப்பொழிவு

அதேநேரம் சென்னையில் வெயில் வாட்டி வதைத்தாலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மே 18 முதல் ஆங்காங்கே மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்குப் பருவக்காற்று மே மாதத்தின் கடைசி வாரத்தில் கேரளாவை வந்தடையக்கூடும். ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களுக்கு மழைப்பொழிவு சாதகமாக இருக்கும். அதன் பிறகு ஜூன் மாதத்தின் எஞ்சிய நாட்களில் இயல்பை விடக் குறைவான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories