Chennai Lock Down : இன்று காலை முதலே சென்னையில் லாக் டவுன் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் சுற்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது குறிப்பாக குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிண்டி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது. வார நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 5,000 பேரும் இந்த பூங்காவை பார்வையிட வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பூங்காவை தற்காலிகமாக மூடுவதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
பறவைக் காய்ச்சல்
தமிழகத்தில் கடந்த மாதம் பிப்ரவரி தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில் அவை பறவை காய்ச்சலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை, பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் சென்னையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
35
20 பறவைகள் பலி
அதன் பின்னர் பெரிய அளவில் பறவைகள் இறக்கவில்லை. இந்த நிலையில் கிண்டி சிறுவர் பூங்காவில் அடுத்தடுத்து 20 பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கால் நாரைகள், கொக்குகள், கரண்டிவாயன், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் இறந்துள்ளன. கடந்த 13ம் தேதி மட்டும் இரண்டு முதல் நான்கு வரை எண்ணிக்கையில் பறவைகள் இறந்துள்ளன. கடந்த ஏழு நாட்களில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. பறவைகளின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து பூங்காவை தற்காலிகமாக மூட முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயிருப்பதாவது, “இந்த பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநில பறவைகள் கூண்டில் சில பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போட்டு பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசால் வெளியிடப்பட்ட பறவை காய்ச்சல் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நடவடிக்கை திட்டம், முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகள் ஆகியவை துறையின் மூலம் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
பொதுமக்களிடம் அரசு கோரிக்கை
கிண்டி சிறுவர் பூங்கா சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டு ரூ.30 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது. 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா முக்கிய பொழுதுபோக்கு மற்றும் கல்வி மையமாக திகழ்ந்து வருகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இயங்குகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60-ம், குழந்தைகளுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மற்ற விலங்குகள், பறவைகளுக்கு தொற்றுப் பரவாமல் இருப்பதற்காகவும் சிறுவர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவை சுற்றியுள்ள மரங்களில் காணப்படும் பறவைகளையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகுந்த ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.