Annual Exam Time Table: 17ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன் பிறகு 2026 –2027ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கப்படலாம்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது.
26
முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டம்
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் முழு ஆண்டு முன்கூட்டியே நடத்த நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.
36
தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி (திங்கள் கிழமை) 4 மற்றும் 5 வகுப்புக்கு தமிழ், 07ம் தேதி (செவ்வாய் கிழமை) 4 மற்றும் 5 வகுப்புக்கு விருப்பமொழிப் பாடம், 08ம் தேதி (புதன் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு தமிழ், 4 மற்றும் 5 வகுப்புக்கு ஆங்கிலம், 09ம் தேதி (வியாழக்கிழமை) 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு விருப்பமொழிப் பாடம், 4 மற்றும் 5 வகுப்புக்கு கணிதம், 13ம் தேதி (திங்கள் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு ஆங்கிலம், 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு அறிவியல், 16ம் தேதி (வியாழக் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு கணிதம், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் 1ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 2ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 3ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12 மணி வரையிலும், 4ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 5ம் வகுப்புக்கு காலை 10 10 மணி முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.
56
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களிள் தேர்வு அட்டவணை
அதன்படி ஏப்ரல் 1ம் தேதி (புதன் கிழமை) தமிழ், 06ம் தேதி (திங்கள் கிழமை) விருப்ப மொழி, 07ம் தேதி (செவ்வாய் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு ஆங்கிலம், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு கணிதம், 08ம் தேதி (புதன் கிழமை) உடற்கல்வி, 09ம் தேதி (வியாழக் கிழமை) 6 மற்றும் 8-ம் வகுப்புக்கு கணிதம், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு ஆங்கிலம், 13ம் தேதி (திங்கள் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு அறிவியல், 7 முதல் 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல், 16ம் தேதி (வியாழக் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு சமூக அறிவியல், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.
66
17ம் தேதி முதல் கோடை விடுமுறை
இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன் பிறகு 2026 –2027ம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.