TN Weather Update: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் இடி. மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
24
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
34
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
மார்ச் 22ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 23 முதல் மார்ச் 26ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஏதுவும் விடுக்கப்பட்டவில்லை.