Savukku Shankar: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் பேசக்கூடாது என்பது போன்ற கூடுதல் நிபந்தனைகளை விதித்துள்ளது.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 2025ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 25ம் தேதி வரை ஜாமீன் வழங்கி கடந்த டிசம்பர் 27ம் தேதி உத்தரவிட்டனர்.
24
சென்னை உயர்நீதிமன்றம்

34
சவுக்கு சங்கருக்கு கூடுதல் நிபந்தனைகள்
இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். அதாவது, தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சமூக ஊடகங்களில் எந்த வித கருத்தையும் வெளியிட கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது. மீறினால் இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தலைமையிலான குழு அமைத்து சவுக்கு சங்கரை பிப்ரவரி 02ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பிப்ரவரி 03ம் தேதி நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே தற்போதைய நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.