தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு (TTDC) பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்ட இப்பேருந்தின் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள், சென்னை நகரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது.