கரூர் சம்பவம் நடந்தபோது டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார். மேலும் கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அப்போது செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்திருந்தார். அந்த வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி கேள்வி
காவல்துறை சரியாக பாதுகாப்பு வழங்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். தவெக கேட்ட இடத்தை கொடுக்காமல் நெருக்கடியான இடத்தை கொடுத்தனர் என்று காவல்துறை மீது தவெகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.