5 வருடமா வேலையே கிடைக்கலையா.! கை மேல் உதவி தொகை வேண்டுமா.? உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு

First Published | Jan 24, 2025, 1:08 PM IST

சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது. தகுதியுடையவர்கள் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். எஸ்.எஸ்.எல்.சி தோல்வி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

job opportunities

வேலை தேடும் இளைஞர்கள்

படித்த படிப்பிற்கு வேலை தேடி நாள் தோறும் பல லட்சம் பேர் சொந்த ஊரில் இருந்து வெளியூருக்கு செல்கிறார்கள். அப்படி சென்னை,பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் வேலை கிடைக்காதா என அலைந்து திரிகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அந்த அந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.

இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலையானது கிடைத்து வருகிறது.  இருந்த போதும் உரிய வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு நிதி உதவியும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

job

வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 


financial assistance scheme

கல்வி தகுதிகள் என்ன.?

எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி/எச்.எஸ்.சி/பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.

நிதி உதவி பெற தகுதிகள்

1. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும். சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர்.

financial assistance scheme

உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண். உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!