இடித்து தள்ளிய விஜய் வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்.? சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி

Published : Oct 03, 2025, 04:07 PM IST

தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனம் மோதியது தொடர்பாக ஏன் வழக்கு பதியவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லையெனவும் காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்

PREV
13

தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெருக்கடியில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி பி.எச்.தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்போது வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிபதி முதல் கேள்வியாக விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கிழே விழுந்தது நீங்கள் அதை பார்த்தீர்களா என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

23

அதற்கு நானும் பார்த்தேன் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என கேட்டார். பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என நீதிபதி காட்டமாக கூறினார்.  

33

பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ என கேட்டார். அதற்கு அரசு தரப்பில் யாரையும் அரசு பாதுகாக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டது.வழக்குப்பதிய என்ன தடை. புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories