தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC) அமைக்கப்பட்டுள்ளன. இது கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு 2022ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதில் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இந்த குழுவின் நோக்கமானது பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தலை உறுதி செய்வது, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவையாகும்.