டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?

Published : Apr 23, 2025, 10:57 AM ISTUpdated : Apr 23, 2025, 11:22 AM IST

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

PREV
15
டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
TASMAC Scam

TASMAC Case Dismissed: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. 

25
chennai high court

டாஸ்மாக் வழக்கு விசாரணை

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: அமலாக்கத்துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைத்து விசாரணை நடத்தப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? என வாதிட்டனர். 

35
Enforcement Directorate

சட்டவிரோத பணப் பரிமாற்றம்

இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில்: மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 42 வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது என வாதிட்டார்.

45
TASMAC argument

டாஸ்மாக் தரப்பு வாதம்

இதனையடுத்து இறுதி விசாரணையில் அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு வாதங்களும் காரசாரமாக நடந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: துரைமுருகனின் அமைச்சர் பதவி தப்புமா? முக்கிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது! பதற்றத்தில் திமுகவினர்!

55
chennai high court Judgement

அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்த அனுமதி

அதன்படி டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. நள்ளிரவு சோதனை நடத்திய போது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories