கிடு கிடுவென உயர்ந்த கேரட் விலை... ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை என்ன தெரியுமா.?

First Published Feb 8, 2024, 8:35 AM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கேரட், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதன் காரடமாக கடந்த சில நாட்களாக கேரட் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் விரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

vegetables

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

பாகற்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோட்டில் சதமடித்த வெயில்.. தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. நீடிக்குமா? நீடிக்காதா? முழு விபரம் இதோ!

Latest Videos


உச்சத்தில் கேரட் விலை

கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Koyembedu

வெண்டைக்காய் விலை .?

பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை எனில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..

click me!