கிடு கிடுவென உயர்ந்த கேரட், அவரைக்காய் விலை... கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை என்ன தெரியுமா.?

First Published Feb 6, 2024, 8:30 AM IST

காய்கறிகள் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் வெண்டைக்காய், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது. 
 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price Koyembedu

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Latest Videos


கேரட் விலை நிலவரம்.?

கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெண்டைக்காய் விலை.?

பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

Chennai Traffic Change: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

click me!