மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

First Published Jun 25, 2023, 8:54 AM IST

பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட பகுதி வழியாக இயக்கப்படும் ரயில்கள் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “ஈரோட்டிலிருந்து அதிகாலை 6. 25 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 06412) மற்றும் மறு மாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலுருந்து பிற்பகல் 3. 10 மணிக்கு ஈரோடு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 06411) ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரிலிருந்து காலை 8. 45 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06551) மற்றும் மறு மாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலுருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06552) ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

சாந்த்ராகாச்சியிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) இரவு 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் குளிா்சாதன அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22807) மற்றும் மறு மாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் (வண்டி எண்: 22808) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

ஹௌராயிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) மாலை 4. 15 மணிக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மைசூரு செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22817) மற்றும் மறு மாா்க்கமாக மைசூரிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி இரவு 11. 45 மணிக்கு ஹெளரா செல்லும் ரயில் (வண்டி எண்: 22818) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்க ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா.! இதை ட்ரை பண்ணி பாருங்க.!!

click me!