Tamil Nadu Weather: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அனலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதே வேளையில் ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
24
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி அதாவது இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
34
கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு
மார்ச் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் 30-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏப்ரல் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 3ம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.